ஆராரோ நீ ஆராரோ பாடல் வரிகள்
Movie | Raja Mukthi | ||
---|---|---|---|
படம் | ராஜமுக்தி | ||
Music | C. R. Subburaman | ||
Lyricist | Papanasam Sivan | ||
Singers | M. L. Vasanthakumari | ||
Year | 1948 |
பெண் : ஆராரோ நீ ஆராரோ
ஆராரோ நீ ஆராரோ
அன்பே என் இன்பப்
பெருக்கே அமுதே
ஆராரோ நீ ஆராரோ
அன்பே என் இன்பப்
பெருக்கே அமுதே
ஆராரோ நீ ஆராரோ
பெண் : உள்ளம் உருக்கும்
பசுங் கிள்ளையோ எந்தன்
உள்ளம் உருக்கும்
பசுங் கிள்ளையோ எந்தன்
பிள்ளைக் கலி தீர்த்த
தெள்ளமுதே நீ
ஆராரோ நீ ஆராரோ
பிள்ளைக் கலிதீர்த்த
தெள்ளமுதே நீ
ஆராரோ நீ ஆராரோ
பெண் : சிவன் மகிழ் உமை தரும்
சிங்கார வேலனோ
சிவன் மகிழ் உமை தரும்
சிங்கார வேலனோ
தீங்குழல் ஊதும் வாய்
மாயன் கோபாலனோ
தீங்குழல் ஊதும் வாய்
மாயன் கோபாலனோ
ஆராரோ நீ ஆராரோ
தீங்குழல் ஊதும் வாய்
மாயன் கோபாலனோ
ஆராரோ நீ ஆராரோ
பெண் : அன்பே என் இன்ப
பெருக்கே அமுதே
ஆராரோ நீ ஆராரோ