புது சூரியன் என் வீட்டிலே பாடல் வரிகள்
Movie | Pattas | ||
---|---|---|---|
படம் | பட்டாஸ் | ||
Music | Vivek – Mervin | ||
Lyrics | Uma Devi | ||
Singers | Anuradha Sriram | ||
Year | 2020 |
பெண் : புது சூரியன் என் வீட்டிலே
அழகாகதான் விளையாடுதே
இரு தோளிலும் சுகம் கூடுதே
உன்னை தூக்கி நான் பசி ஆறுவேன்
பெண் : அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
பெண் : வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே
பெண் : கடல் தாண்டி நீரும் போய் விடுமா
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
பெண் : அனுதினம் உன்னை
நினைக்கையில் மனம்
அணு அணுவாய் துடிக்குது வா
திருமுகம் தந்து
சிறு விரல் கொண்டு
பெரு வழிகளை துடைத்திட வா
மறுபடி உன்னை மடியினில் பெற
கருவறை தவம் கிடக்குது வா
பெண் : நீயின்றி நான் வாழ
ஆரம்பம் ஏதிங்கே
நீதானே நான் வாழ
ஆதரவா அன்பே
பெண் : வான் தாண்டி சூரியனும்
தூரங்கள் போய்விடுமா
தாய் போல வாழ்வெல்லாம்
நியாங்கள் தோன்றுமா
பெண் : தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
பெண் : அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
பெண் : வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே
பெண் : கடல் தாண்டி நீரும் போய் விடுமா…..
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
கடல் தாண்டி நீரும் போய் விடுமா……
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா