சராசரம் உன்னை யாவும் தேடுமே பாடல் வரிகள்
Movie | Meera | ||
---|---|---|---|
படம் | மீரா | ||
Music | S. V. Venkatraman | ||
Lyricist | Parthi Bhaskar | ||
Singers | M. S. Subbulakshmi | ||
Year | 1945 |
பெண் : சராசரம் உன்னை யாவும்
தேடுமே…
சராசரம் உன்னை யாவும்
தேடுமே…
பெண் : மறைகளும் மகிழ்ந்துன்னைப்
பாடுமே….ஹே பிரபோ…..ஓஒ
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே
பெண் : உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா…..ஆஅ…..ஆஅ….ஆ….
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா
பெண் : கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா
இறங்குவதறிந்திலையா
மறந்திடலாகாதையா
பெண் : இரவெலாம் கண்ணில்
நீர் அருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரீ என நாவும் கதறும்
ஹரி ஹரீ என நாவும் கதறும்
இதயமும் பதறும் ஐயா
பெண் : பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா…..ஆஅ…..அடைக்கலம் ஐயா