ஏய் ஏல ஏய் ஏல மொத போதைய விட்டு வாலே பாடல் வரிகள்
Movie | Yaanai | ||
---|---|---|---|
படம் | யானை | ||
Music | G. V. Prakash Kumar | ||
Lyricist | Arivu | ||
Singers | G. V. Prakash Kumar, Arivu and Santhosh Hariharan |
||
Year | 2022 |
ஆண் : அண்ணே கொஞ்சம் பாருண்ணே
இவன் கிழிஞ்ச கதைய கேளுண்ணே
தெனம் தெனம் குடிச்சி குடிய
கெடுத்த கதைய கேளுண்ணே
ஆண் : ஏய்
ஆண் : விடிஞ்சதும் கட்டிங் கட்டிங்
கட தொறந்ததும் கெட்டிங் கெட்டிங்
பொண்டாட்டி திட்டிங் திட்டிங்
திருந்தல இந்த தறுதல
ஆண் : இவன் குடிய நிறுத்த விரும்பல
ஆங் தெருவுல குடிச்சான்
மறவுல குடிச்சான்
பொண்டாட்டி தாலிய வித்துட்டு குடிச்சான்
வசனம் : செரி லே பிறவு என்ன ஆச்சு
ஆண் : பொறுத்து பொறுத்து பாத்து
ஒருநாள் அன்னிக்கு வந்துச்சு கோவம்
இப்ப நம்பாளு நெலம பாவம்
வெளக்குமாத்துல வெரட்டி வெரட்டி
நடுச்சாமத்துல அடிச்சா
சும்மா கிழி கிழினு கிழிச்சு
ராசா வெளிய போலனு எறிஞ்சா
அனைவரும் : ஏய் ஏல ஏய் ஏல
மொத போதைய விட்டு வாலே
ஏய் போல நீ போல
அட மேரேஜ் இப்போ வேணான்ல
அனைவரும் : ஏய் ஏல ஏய் ஏல
மொத போதைய விட்டு வாலே
ஏய் போல நீ போல
அட மேரேஜ் இப்போ வேணான்ல
விசில் : ………………………….
ஆண் : குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத
ஆண் : அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத
ஆண் : கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத
சொரணய எழந்துபுட்டு கேவல படாத
அனைவரும் : அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா சில்லிங்-உ
லிமிட்-அ தாண்டிபிட்டு எதுக்கு மக்கா ஃபீலிங்-உ
பொகைய ஊதிகிட்டே போடாதடா கும்மாளம்
ஸ்டெடி-ஆ நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்
அனைவரும் : ஏய் ஏல ஏய் ஏல
மொத போதைய விட்டு வாலே
ஏய் போல நீ போல
அட மேரேஜ் இப்போ வேணான்ல
அனைவரும் : ஏய் ஏல ஏய் ஏல
மொத போதைய விட்டு வாலே
ஏய் போல நீ போல
அட மேரேஜ் இப்போ வேணான்ல
ஆண் : என்ன நீயும் சொல்ட்ட
உனக்கு கல்யாணம் வேணாம்னு தள்ட்ட அண்ணே
ஆண் : அது வேற இது வேற
நீ மேரேஜ் பண்ணாம என்ன பண்ண போற
இருவர் : பொண்ணுங்க இல்லாத வாழ்க்க போர்-உ
தனி மரத்துக்கு தொணையும் யாரு
குடும்பம் குட்டினு இருந்து பாரு
உனக்கு புடிக்கும் உலக ஜோரு
ஆண் : வேண்டான்னு சொல்லாத ஏண்டா-னு கேக்காத
தம்பி சொன்னா உங்க நல்லதுக்கு
காலம் பூரா நீயும் ஒண்டிக்கட்டையாவே
இருந்த கவல அம்மாவுக்கு
ஆண் : ஏய் வெங்க பயலே நாற பயலே
சரியா சொன்னல ஜிம்மி
குழு : ………………………
ஆண் : பாசத்த நீ பங்கு வச்சா
பாசனமும் பாயாசம் தான்
வீட்டுக்குள்ள தோக்குறவன்
ஊரயெல்லாம் ஜெயிச்சிருவான்
ஆண் : சாதி மதம் பாத்தில்ல
இவன் மண்டக்குள்ள அந்த போதையில்ல
எம்மதமும் சம்மதம் தான்
சம்மதமே நம்மதம் தான்
அனைவரும் : ஒத்த புள்ளையா பெத்து எடுத்தா
அந்த புள்ளைக்கி அப்பா
மொத்த புள்ளையும் சேத்து அணச்சா
இந்த ரவி அப்பா
அனைவரும் : தன்ன பத்தியே நெனக்கிறவன்
ஒத்தையில நின்னான்
உன்னையும் என்னையும் நெனக்கிறவன்
எங்க ரவி அண்ணா
ஆண் : குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத
ஆண் : அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத
ஆண் : கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத
சொரணய எழந்துபுட்டு கேவல படாத
அனைவரும் : அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா சில்லிங்-உ
லிமிட்-அ தாண்டிபிட்டு எதுக்கு மக்கா ஃபீலிங்-உ
பொகைய ஊதிகிட்டே போடாதடா கும்மாளம்
ஸ்டெடி-ஆ நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்