அன்பே பேரன்பே பாடல் வரிகள்

Movie NGK
படம் என்.ஜி.கே
Music Yuvan Shankar Raja
Lyrics Uma Devi
Singers         Shreya Ghoshal,
Sid Sriram
Year 2019

அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்

அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா ஈர்க்குமா
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா தோற்குமா

மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ

திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே தூண்டுதே


நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே

தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே

ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்

அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே

உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *