சின்ன சின்ன கண்ணா பாடல் வரிகள்
Movie Name | Kilinjalgal |
---|---|
திரைப்பட பெயர் | கிளிஞ்சல்கள் |
Music | T. Rajendar |
Lyricist | T. Rajendar |
Singer | P. Susheela |
Year | 1981 |
பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய்
பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
பெண் : சுட்டி பையா சுற்றி வந்தால் முத்தம் தருவேனோ
எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ
பெண் : அடம் ஒன்று பிடிக்காதே
தேர் வடம் என்று இழுக்காதே ஹே ஹே
அடம் ஒன்று பிடிக்காதே
தேர் வடம் என்று இழுக்காதே
பெண் : கொடியுடல் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட
சுகம் ஒன்று பிறக்காதோ
கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட
தடம் ஒன்றும் இருக்காதோ…
பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
பெண் : துடிக்குது வாட்ச்சு கொதிக்குது
மூச்சு வாட்டி வதைக்காதே
கண்ணாம் மூச்சு கண்ணால் போச்சு ஓடி ஒளியாதே
தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ
தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ
பெண் : கன்னத்தை திரிகிட கைவிரல் துடித்திட
அணைத்திட வருவாயோ
காற்றினில் மிதந்திடும் கவிதையை படித்திடும்
பொருள் அதை உரைப்பாயோ…
பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய்
பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
Tags: Kilinjalgal, Kilinjalgal Songs Lyrics, Kilinjalgal Lyrics, Kilinjalgal Lyrics in Tamil, Kilinjalgal Tamil Lyrics, கிளிஞ்சல்கள், கிளிஞ்சல்கள் பாடல் வரிகள், கிளிஞ்சல்கள் வரிகள் |
---|