அய்யோ பத்திகிச்சு பாடல் வரிகள்
Movie Name | Rhythm |
---|---|
திரைப்பட பெயர் | ரிதம் |
Music | A. R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Udit Narayan and Vasundhara Das |
Year | 2000 |
பெண் : அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
கண்ணே
ஆண் : அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
பெண்ணே
பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு
சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ
கண்ணே
ஆண் : ஹே முள்ளை முள்ளால்
எடுப்பது போல் நெருப்பை
நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது
போல் நெருப்பை நெருப்பால்
அணைப்போம் வா உன் கண்ணோடு
வாழ்கின்ற காதல் தீ வாழ்க
பெண் : ஹே முள்ளை முள்ளால்
எடுப்பது போல் நெருப்பை நெருப்பால்
அணைப்போம் வா உன் கண்ணோடு
வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஆண் : அய்யோ பத்திகிச்சு
பெண் : ஓ டடடா ஓஓ
பெண் : ஆணும் பெண்ணும்
சிக்கிமுக்கிக் கல் ஒன்றோடு
ஒன்று உரசப் பொறி வருமே
வா வா ஹா ஹா ஹா
ஆண் : ஐம்பொறியெல்லாம்
தீப்பொறிதான் ஆசையில்
எரியும் சரிதான்
அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா வா
பெண் : காதல் நெருப்பு
உள்ளவரை காலம்
உறைவதில்லை கதிரவனே
வா வா காதலிப்போம் வா வா
ஆண் : தீதான் முதல்
விஞ்ஞானம் காதல்தான்
முதல் மெய்ஞானம் தீ
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
ஆண் : தீச்சுடர் எரியப்
பொருள் வேண்டும் காதல்
எரிவது எதிலே விடை
சொல்ல வா வா வா வா
வா வா வா வா வா
பெண் : ஒவ்வொரு உயிரையும்
திரியாக்கி காதல் தன் சுடர்
கொளுத்தும் ஒளி விடுவோம்
வா ஆஹா வா ஆஹா ஆஆ
ஆண் : காதல் நெருப்பை
நீ வளர்த்து கவலைக்
குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா
சுகம் வளர்ப்போம் வா வா
வா
பெண் : தீபம் போலே
இருந்தவள் நான் தீப்பந்தமாய்
என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
அய்யோ அய்யோ அய்யோ
Tags: Rhythm, Rhythm Songs Lyrics, Rhythm Lyrics, Rhythm Lyrics in Tamil, Rhythm Tamil Lyrics, ரிதம், ரிதம் பாடல் வரிகள், ரிதம் வரிகள் |
---|