வண்டி உருண்டோட அச்சாணி பாடல் வரிகள்
Movie Name | Vannakili |
---|---|
திரைப்பட பெயர் | வண்ணக்கிளி |
Music | K. V. Mahadevan |
Lyricist | A. Maruthakasi |
Singer | Seerkazhi Govindarajan and P. Susheela |
Year | 1959 |
பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
ஆண் : சொந்தம் கொண்டாடவென்று
அன்பு கொண்டு
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று
ஆண் : சொந்தம் கொண்டாடவென்று
அன்பு கொண்டு
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று
பெண் : வந்தாலும் பலன் இல்லையே
அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே
வந்தாலும் பலன் இல்லையே
அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே
பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
பெண் : நிலவைக் கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா
நிலவைக் கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா..ஆ ..
உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும்
உண்மை இன்பம் கொண்டாடுமா
ஆண் : விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா
விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா
என் வேலையை நான் பார்க்க வேண்டும் தெரியுமா
சும்மா வெளையாட வேண்டாம்
அதை கொடும்மா கொடும்மா
ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
ஆண் : வம்பு என்னம்மா வாங்க அதைத் தாங்க
வந்த வழிப் பார்த்து நேராகப் போங்க
உங்க வழிப் பார்த்து நேராகப் போங்க
பெண் : வழிப் பார்த்து நான் போகவே எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க
வழிப் பார்த்து நான் போகவே எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க
ஆண் : ஆஹ்……..
பெண் : ம்..ம்…ம்…
ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
ஆண் : ஓஹோ
இருவர் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள் |
---|