ஆத்திலே தண்ணி வர பாடல் வரிகள் 

Movie Name  Vannakili
திரைப்பட பெயர் வண்ணக்கிளி
Music K. V. Mahadevan
Lyricist A. Maruthakasi
Singer Seerkazhi Govindarajan
Year 1959

ஆண் : ஹா..ஆ..ஆ..ஆ..ஹோ ..ஓ ஓ ..ஹோ..

ஆண் : ஆத்திலே தண்ணி வர
அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
ஆத்திலே தண்ணி வர
அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து
அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

ஆண் : பாத்தி கட்டி நாத்து நட்டுப்
பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன்
பாத்தியமாப் போவதும் ஏன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப்
பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன்
பாத்தியமாப் போவதும் ஏன்
கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும்
தவிப்பதும் ஏன் சொல்லம்மா
கலப்பை புடிச்சவனும்
தவிப்பதும் ஏன் சொல்லம்மா

குழு : …………………..

ஆண் : பஞ்செடுத்துப் பதப்படுத்தி
பக்குவமா நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி
பக்குவமா நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ..
காத்திருக்கும் அத்தை மவன்
கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு
மாத்துமாலை போடுவதேன்

ஆண் : காத்திருக்கும் அத்தை மவன்
கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு
மாத்துமாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

குழு : …………………..

ஆண் : ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும்
இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும்
இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆண் : ஆத்திலே தண்ணி வர
அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து
அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

ஆண் : கண்ணம்மா ..சொல்லம்மா
கண்ணம்மா ..சொல்லம்மா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *