கலகலக்குது கலகலக்குது பாடல் வரிகள்

Movie Name  Badri
திரைப்பட பெயர் பத்ரி
Music Ramana Gogula
Lyricist Pazhani Bharathi
Singer Mano
Year 2001

ஆண் : தின தின தான்
தின தின தான்
தின தின

ஆண் : கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண் : கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண் : என் அண்ணன் தோள் மேலே
பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை
ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்

குழு : ஓ..ஹோ
ஓ..ஹோ

ஆண் : கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

குழு : ………………………………

ஆண் : அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்

ஆண் : ஒன்றில் ஒன்றாக
நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்க்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்

ஆண் : திருமணங்கள் எல்லாமே
சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ
சொர்க்கத்தையே உருவாக்கும்

ஆண் : நீங்கள் தரும் அன்பினிலே
குழந்தையென மாறுது என் மணம்

குழு : ஓ..ஹோ
ஓ..ஹோ

ஆண் : கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

பெண் : அழகான மல்லிப்பூ
பொண்ண பாரு
வெக்கத்தால் ரோசாவா
மாறுது பாரு
கன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோடு காதல் சங்கதி பேசு
ம்ம்…ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….

ஆண் : தம்பி உன் குறும்பை
இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால்
தாயை போல இவள் கண்டிப்பாள்

ஆண் : தம்பி நீ இரவில் தாமதமாக
வீட்டுக்கு வந்தால்
முட்டி போடச்சொல்லி தண்டிப்பாள்

ஆண் : எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு
யாருமில்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே

ஆண் : இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்

குழு : ஓ..ஹோ
ஓ..ஹோ

ஆண் : கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண் : என் அண்ணன் தோள் மேலே
பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை
ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்

குழு : ஓ..ஹோ
ஓ..ஹோ

ஆண் : கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

Tags: Badri, Badri Songs Lyrics, Badri Lyrics, Badri Lyrics in Tamil, Badri Tamil Lyrics, பத்ரி, பத்ரி பாடல் வரிகள், பத்ரி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *