ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே பாடல் வரிகள்
Movie | Naam Iruvar | ||
---|---|---|---|
படம் | நாம் இருவர் | ||
Music | R. Sudarsanam | ||
Lyricist | Mahakavi Subramanya Bharathiyaar | ||
Singers | D. K. Pattammal | ||
Year | 1947 |
பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே
பெண் : எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
பெண் : சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே
ஆடுவோமே
பெண் : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்
ஆடுவோமே
பெண் : நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்
பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே….
ஆடுவோமே….ஆடுவோமே….ஆடுவோமே….ஆடுவோமே….