ஆஹா இவர் யாரடி பாடல் வரிகள்
Movie | Mohini | ||
---|---|---|---|
படம் | மோகினி | ||
Music | S. M. Subbaiah Naidu, C. R. Subburaman |
||
Lyricist | Ambikapathi | ||
Singers | P. Leela, K. V. Janaki | ||
Year | 1948 |
பெண் : ஆஹா இவர் யாரடி
ஆஹா இவர் யாரடி
என்னை ஆளவரும் பாலவடி
வேலனைப்போல் காணுதடி
பெண் : ஆஹா இவர் யாரடி
என்னை ஆளவரும் பாலவடி
வேலனைப்போல் காணுதடி
ஆஹா இவர் யாரடி
பெண் : வேலனல்லடி இவன்
மெல்லியர்கள் அணியுஞ்
வேலனல்லடி இவன்
மெல்லியர்கள் அணியுஞ்
சேலைகள் பாவாடைகள் மேலாடைகள்
கொண்டோடும் கள்ளன்
சேலைகள் பாவாடைகள் மேலாடைகள்
கொண்டோடும் கள்ளன்
பாலகிருஷ்ணன்தானடி
யசோதை நந்தன் பாலகிருஷ்ணன்தானடி
பெண் : அறியாமல் உளறாதேடி
அடி லலிதா
அறியாமல் உளறாதேடி
அந்தக் கிருஷ்ணனுக்கிந்த
தொந்தி வயறேதடி
அறியாமல் உளறாதேடி
பெண் : சரியான உபமானம்
கணநாதர் அவதாரம்
சரியான உபமானம்
கணநாதர் அவதாரம்
அறியாமல் உளறாதேடி
பெண் : பத்தினிப் பெண்ணே என்னையே
பார்க்குறார் பயமுடனே
பத்தினிப் பெண்ணே என்னையே
பார்க்குறார் அவர்
சித்தமெதுவோ உடலும் வேர்க்குறார்
சித்தமெதுவோ உடலும் வேர்க்குறார் பயமுடனே
பத்தினிப் பெண்ணே என்னையே பார்க்குறார்
பெண் : கண் உன்னைப் பார்க்குதடி
ஆனாலும் கருத்தென்னை நாடுதடி
கண் உன்னைப் பார்க்குதடி
ஆனாலும் கருத்தென்னை நாடுதடி
எண்ணமெல்லாம் தெரிந்தேன்…….
ஏ……ஏ……ஏ……ஏ…..
எண்ணமெல்லாம் தெரிந்தேன்
அவர்க்கே எந்தன் மேலாசையடி
எண்ணமெல்லாம் தெரிந்தேன்
அவர்க்கே எந்தன் மேலாசையடி
இருவர் : சிந்தைக்குகந்தவன் யார்
அதனைச் செப்பிடும் என்னரசே
சிந்தைக் குகந்தவன் யார்
அதனைச் செப்பிடும் என்னரசே
அந்தமிகும் ரதியைப் பழித்திடும்
சுந்தரியும் இவளோ அவளோ
அந்தமிகும் ரதியைப் பழித்திடும்
சுந்தரியும் அவளோ
இருவர் : என்னழகைப் பார்
மின்னலிடை பார் அன்னநடை பார்
பொன்னுடையைப் பார் மன்னவா
கண்டே மயங்கி நின்றோம்
மன்மதா உன்னை
கண்டே மயங்கி நின்றோம்
மன்மதா உன்னை