ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே பாடல் வரிகள் 

Movie Name  Vannakili
திரைப்பட பெயர் வண்ணக்கிளி
Music K. V. Mahadevan
Lyricist A. Maruthakasi
Singer Chorus
Year 1959

பெண்கள் குழு : ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
நாம் அழியாத புகழ் தன்னைத் தேடுவோமே
கற்பை அணியாக நாம் என்றும் சூடுவோமே
என்றும் ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

பெண்கள் குழு : கண்ணகியின் மரபில்
வந்த கன்னியர்கள் என்பதை
நாம் எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே
பெண் குலத்தின் பெருமை தன்னை
எடுத்து சொல்வோமே
பெண் குலத்தின் பெருமை தன்னை
எடுத்து சொல்வோமே

பெண்கள் குழு : கற்பெனும் தீயால்
பெரும் அற்புதம் செய்தாள்
கற்பெனும் தீயால்
பெரும் அற்புதம் செய்தாள்
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
என்றும் ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

பெண்கள் குழு : ஹா
அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்
அணையாத கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள்
அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்
சிவனோடு பிரம்மாவை திருமாலை முன்னாள்
சிவனோடு பிரம்மாவை திருமாலை முன்னாள்
சிசுக்களாக்கி அமுதம் அளித்த
பெருமை சொல்வோமே
சிசுக்களாக்கி அமுதம் அளித்த
பெருமை சொல்வோமே
என்றும்…..ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

பெண்கள் குழு : நாதனுயிர் காத்திடவே
ஆதவனை மறைத்துவிட்ட
மாதரசை மனதில் கொள்வோமே
நளாயினி மகிமைதனை
எடுத்துச் சொல்வோமே
நளாயினி மகிமைதனை
எடுத்துச் சொல்வோமே

பெண்கள் குழு : கற்பெனும் தீயால் பெரும்
அற்புதம் செய்தாள்
கற்பெனும் தீயால் பெரும்
அற்புதம் செய்தாள்
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
என்றும்…..ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *