ஆட்டம் எல்லாம் பாடல் வரிகள்
Movie | Sila Nerangalil Sila Manidhargal |
||
---|---|---|---|
படம் | சில நேரங்களில் சில மனிதர்கள் |
||
Music | Radhan | ||
Lyricist | Rakendu Mouli | ||
Singers | Andrea, MC Chetan | ||
Year | 2022 |
ஆண் : நீ நீயாக இருப்பதில் இல்லை பிழை
நீ கேள்வி குறி என்றால் யார் இங்கு விடை
இந்த பூவியினிலே யாரிடம் இல்லை குறை
உணர்வுகள் உணர்ச்சிகள் சூழ்நிலை கரும் சிறை
ஆண் : கரை சேரும் வரை ஓயவில்லை அந்த அலை
ஏற்ற தாழ்வு என்பதெல்லாம் ஒரு மன நிலை
பிரேக் ஃபிரீ ஃறம் தேட் கற்பனை தரும் திரை
எல்லோரும் நம் சொந்தம் யதார்த்தம் இந்த நிலை
ஆண் : புரியுதா உரைக்குதா
உண்மைகள் உனக்கு தெரியுதா
பதறுதா வருந்துதா
எண்ணங்கள் சிந்தைகள் உடையுதா
ஆண் : லெவல் இட் அப் பேதங்கள் உடைந்து
மனிதன் நம்முள்ளே கலந்து
லெவல் இட் அப் பகையை துறந்து
சிறகை விரித்து பறந்து
ஆண் : ஆட்டம் எல்லாம் கொஞ்சம் காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எது தான் இங்கே நிரந்திரம்
ஆண் : ஆட்டம் எல்லாம் கொஞ்சம் காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எது தான் இங்கே நிரந்திரம்
பெண் : ஏன் ஒருமையை உணர மறக்கிறோம் ஏன்
பொறுமையை இழந்து நிற்கிறோம் ஏன்
வெறுமையில் வாழ்க்கை தொலைக்கிறோம் ஏன்
வறுமைக்கோடு அழியாததேன்
பெண் : நாடுகள் வேறுபாடுகள் ஏன்
ஆயுதம் ஆட்சி செய்வதும் ஏன்
மனிதமும் முழிக்க மறப்பதும் ஏன்
சுதந்திரம் வெறும் பேச்சானதேன்
பெண் : சிறுபொறி நெருப்பு தந்தவை யாவும்
நாகரிகம் என மாற்றி விட்டோம்
வானத்தை தாண்டி பூமியை தோண்டி
இயற்கையை சீண்டி பார்த்து விட்டோம்
பெண் : பேராசைகளின் விளைவுகள் யாவும்
பேரலையாக பொங்காதோ
மனிதன் என்னும் இனத்தாலே
உலகம் முழுதும் சாகாதோ
ஹம்மிங் : …………………..
ஆண் : பொய்யை ஏன் கொண்டாடினோம்
நேசிக்க ஏன் யோசித்தோம்
பெருமை பீதி கொள்கிறோம்
எதை நோக்கி போகின்றோம்
குறையை சொல்லி புலம்பினோம்
குரலை எழுப்ப தயங்கினோம்
கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி
வாழ்க்கையை வாழ்கின்றோம்
ஆண் : மதியற்று தரங்கெட்டு வெறிகொண்டு
சரிகட்டி சினுங்காதே
வழிகாட்டு தலையாட்டி சிலைபோல
சரியென்று நிற்காதே
கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில்
கிருமி போல் பரவாதே
மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு
போதையில் சரியாதே
இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
பெண் : எதிர்நீச்சல் போடவே
துணிந்த சிறு மீனைப்போலே
சூறாவளி காற்றிலே
சிறகடித்திடும் பறவைபோலே
பெண் : புயல் மோதும் வேகத்தின்
வழு தாங்கும் மரத்தைப்போலே
பூகம்ப அசரலும்
மதிக்காதிருக்கும் மலைப்போலே
பெண் : இருளாக உலகம்
உன்னை சூழும்போதும்
உனதுள்ளே தோன்றும்
ஒளியை நோக்கி செல்லு
ஆண் : கண்ணாடி முன்னாடி பல பிம்பம்
தெரியுது தள்ளாடி
விண்ணோக்கு போ உன் முன்னே
பல தடைகள் வந்தாலும் முன்னேரி
பல குறைகள் இருந்தாலும்
நெறியாக்கி நடைபோடு
லைக் கில்லாடி
யார் அறிவாளி யார் கோமாளி
பகுத்தறிந்து வாழ்பவன் முன்னாேடி
ஆண் : புலம்பி குழம்பி இருக்காதே
நீர் தளும்பி கனந்து நிற்காதே
மனம் தளராதே நீ பதறாதே
உடையாத கல் சிலை ஆகாதே
இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
ஆண் : பொய்யை ஏன் கொண்டாடினோம்
நேசிக்க ஏன் யோசித்தோம்
பெருமை பீத்தி கொள்கின்றோம்
எதை நோக்கி போகின்றோம்
குறை சொல்லி புலம்பினோம்
குரலை எழுப்ப தயங்கினோம்
கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி
வாழ்க்கையை வாழ்கின்றோம்
ஆண் : மதியற்று தரங்கெட்டு வெறிகொண்டு
சரிகட்டி சினுங்காதே
வழிகாட்டு தலையாட்டி சிலைபோல
சரியென்று நிற்காதே
கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில்
கிருமி போல் பரவாதே
மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு
போதையில் சரியாதே