அடிக்கிற கைதான் அணைக்கும் பாடல் வரிகள்
Movie Name | Vannakili |
---|---|
திரைப்பட பெயர் | வண்ணக்கிளி |
Music | K. V. Mahadevan |
Lyricist | A. Maruthakasi |
Singer | Trichy Loganathan and P. Susheela |
Year | 1959 |
ஆண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
ஆண் : இனிக்கிற வாழ்வே கசக்கும்
பெண் : இனிக்கிற வாழ்வே கசக்கும்
ஆண் : கசக்கிற வாழ்வே இனிக்கும்
பெண் : கசக்கிற வாழ்வே இனிக்கும்
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
பெண் : புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
ஆண் : இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
பெண் : இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : பலே
பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
பெண் : இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
ஆண் : விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
பெண் : விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண் : சபாஷ் ..ஹாஹாஹா ..
பெண் : அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண் : அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள் |
---|