ஆலங்காலங்குருவி பாடல் வரிகள்
Movie | Pulikkuthi Pandi | ||
---|---|---|---|
படம் | புலிக்குத்தி பாண்டி | ||
Music | N. R. Raghunanthan | ||
Lyrics | Mani Amudhan | ||
Singers | Lijesh Kumar, Vandana Srinivasan |
||
Year | 2021 |
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி
கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
கிட்ட கிட்ட வந்து நீயும்
என்ன கொல்லுறியே
நிக்க வெச்சு பாக்குறியே
நீயும் என்ன கேக்குறியே
கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே
காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி
உன் கூட பேசுறேன்
உன்ன பத்தி பேசுறேன்
வேறேதும் தெரியல
இப்ப ஒன்னும் புரியல
உன் கூட நடக்குறேன்
உன்ன சுத்தி நடக்குறேன்
வேறேதும் தோனல
இப்ப நானும் நான் இல்ல
எத்தனை எத்தனை நட்சத்திரம்
எண்ணி தானே பாக்கனுமே
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்
வாழ்ந்த காட்டுன்னுமே
அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி
………………………
எந்த பக்கம் தொட்டாலும்
கற்கண்டு இனிக்குமே
அது போல உன் நெனப்பு
நெஞ்சுக்குள்ள இருக்குமே
என்ன நீ சொன்னாலும்
கேக்கனும்னு தோணுமே
என்ன சொல்ல இந்த பந்தம்
ஆயிசுக்கும் வேணுமே
நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே
அது கையுல நான் கொடுப்பேன்
நெசமா வாழ்க்கை அழகா இருக்கு
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி
கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே
காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி