அத்த மகன் மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு பாடல் வரிகள்
Movie Name | Theeratha Vilaiyattu Pillai |
---|---|
திரைப்பட பெயர் | தீராத விளையாட்டுப் பிள்ளை |
Music | Sankar Ganesh |
Lyricist | Vairamuthu |
Singer | Vani Jairam and Chorus |
Year | 1982 |
குழு : ……………………………
பெண் : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி
பெண் : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி
பெண் : சிங்காரிக்கு ஆச இருக்கு
சம்சாரிக்கு காவி எதுக்கு
ஓடாதே வாடாதே
உள்ளதை சொல்லிவிடு
குழு : ஹோய் அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி
பெண் : ஆண்டிப்பட்டி சந்தையிலே
கன்னுக்குட்டி காணோமாம்
மாட்டிகிச்சு கன்னுக்குட்டி
கட்டிப் போட வேணாமா
பெண் : ஆண்டிப்பட்டி சந்தையிலே
கன்னுக்குட்டி காணோமாம்
மாட்டிகிச்சு கன்னுக்குட்டி
கட்டிப் போட வேணாமா
பெண் : இது கெட்டி மேளமடி
கொஞ்சம் தட்டிப் பாருங்கடி
குழு : இது கெட்டி மேளமடி
கொஞ்சம் தட்டிப் பாருங்கடி
பெண் : கேளுங்கடி மச்சான் மீச
இரவல் வாங்கி வந்ததடி
கேளுங்கடி மச்சான் மீச
இரவல் வாங்கி வந்ததடி
பெண் : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி ஹேய் ஹேய்
பெண் : ராத்திரிகள் வந்தாலே
நெஞ்சில் வரும் நூறாச
பாற்கடலை குடிப்பதற்கு
பூனைக்கென்ன பேராச
பெண் : ராத்திரிகள் வந்தாலே
நெஞ்சில் வரும் நூறாச
பாற்கடலை குடிப்பதற்கு
பூனைக்கென்ன பேராச
பெண் : அடி நீ பெண் ஜாதி
உனக்கெதுக்கு பொஞ்சாதி
குழு : அடி நீ பெண் ஜாதி
உனக்கெதுக்கு பொஞ்சாதி
பெண் : விளக்கது அணைக்கும்போது
விளக்கம் கேட்கும் அப்பாவி…..
விளக்கது அணைக்கும்போது
விளக்கம் கேட்கும் அப்பாவி…..
குழு : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி
பெண் : பொண்ணு ஒண்ண கட்டிக்கிட்டா
பொழுது போயி கொஞ்சிக்கலாம்
முந்தான தொங்கலிலே
முடிஞ்சி உன்ன வச்சிக்கலாம்
பெண் : பொண்ணு ஒண்ண கட்டிக்கிட்டா
பொழுது போயி கொஞ்சிக்கலாம்
முந்தான தொங்கலிலே
முடிஞ்சி உன்ன வச்சிக்கலாம்
பெண் : இது துள்ளாத மீனு
ருசி இல்லாத தேனு
குழு : இது துள்ளாத மீனு
ருசி இல்லாத தேனு
பெண் : புத்தருக்கு வாரிசாகி
போதி மரத்தில் நிற்பாரு….
புத்தருக்கு வாரிசாகி
போதி மரத்தில் நிற்பாரு….
குழு : {அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி} (2)