அழகே சுகமா… 2 பாடல் வரிகள்
Movie Name | Paarthale Paravasam |
---|---|
திரைப்பட பெயர் | பார்த்தாலே பரவசம் |
Music | A. R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Srinivas and Sadhana Sargam |
Year | 2001 |
ஆண் : அழகே சுகமா…
பெண் : அன்பே சுகமா…
ஆண் : உன் கோபங்கள் சுகமா…
பெண் : உன் தாபங்கள் சுகமா
பெண் : தலைவா சுகமா…
சுகமா…
உன் தனிமை சுகமா….
சுகமா…..
ஆண் : கன்னம் ரெண்டும் சுகமா
அதில் கடைசி முத்தம் சுகமா
உந்தன் கட்டில் சுகமா
எனது ஒற்றை தலையனை சுகமா..ஆ..
பெண் : அன்பே சுகமா…
உன் தாபங்கள் சுகமா…
அன்பே சுகமா…
உன் தாபங்கள் சுகமா…
பெண் : தலைவா சுகமா…
சுகமா…
உன் தனிமை சுகமா….
சுகமா…..
ஆண் : அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்
பெண் : அன்பே உன்னை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்
ஆண் : பழைய மாலையில்
புதிய பூக்கள்தான்
சேராதா….
பெண் : பழைய தாலியில்
புதிய முடிச்சுகள்
கூடாதா….
ஆண் : வாழ்க்கை ஓர் வட்டம்போலே
முடிந்த இடத்தில் தொடங்காதா…
பெண் : வாழ்க்கை ஓர் வட்டம்போலே
முடிந்த இடத்தில் தொடங்காதா…
ஆண் : அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா