சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா பாடல் வரிகள்
Movie Name | Vannakili |
---|---|
திரைப்பட பெயர் | வண்ணக்கிளி |
Music | K. V. Mahadevan |
Lyricist | A. Maruthakasi |
Singer | P. Susheela |
Year | 1959 |
பெண் : சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
பெண் : தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
அப்போ… கலகலன்னு சிரிச்சுகிட்டு என்ன பாரம்மா
பெண் : சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
பெண் : கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
பெண் : கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
ஹூஹூம் கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யா பழம் பறிச்சு தாரேன் அழுகக்கூடாது
பெண் : சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள் |
---|