சின்ன ராசா பாடல் வரிகள்
Movie | Kombu Vatcha Singamda | ||
---|---|---|---|
படம் | கொம்பு வச்ச சிங்கம்டா | ||
Music | Dhibu Ninan Thomas | ||
Lyricist | Gkb | ||
Singers | Kapil Kapilan | ||
Year | 2022 |
ஆண் : மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள
சின்ன ராசா
குழு : சின்ன ராசா…
ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா!
சின்ன ராசா
குழு : சின்ன ராசா….
ஆண் : ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம்
உன்ன விட்டு போவதென்ன?
தீராத வலி உனக்கு சின்ன ராசா
பெண் குழு : உன்னோடு வான் சேருதே!
உன்னை தாலாட்டுதே!
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே!
பெண் குழு : எண்ணங்கள் நூறானதே!
உன்னை போலானதே!
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!
குழு : சின்ன ராசா
ஆண் : ஓஓ ஓஓ ஓஓ…
ஓஓ ஓஓ ஓஓ…
ஆண் : ………………….
ஆண் : உசிர உருக்கி உருவஞ் செஞ்ச
நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா
குழு : சின்ன ராசா
ஆண் : மண்ண தின்ன காலமெல்லாம்
மண்ணுக்குள்ள போனதென்ன? சின்ன ராசா
குழு : சின்ன ராசா…
ஆண் : மலைத்தேனு கூட்டுக்குள்ள
கல்லெறிஞ்ச சாபம் என்ன? சின்ன ராசா
குழு : சின்ன ராசா…
ஆண் : வெந்த புண்ணில் வேல பாய்ச்சி
வெண்ணீர விட்டதென்ன? சின்ன ராசா
அனைவரும் : உன்னோடு வான் சேருதே!
உன்னை தாலாட்டுதே!
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே!
எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே!
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!
ஆண் : மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா
குழு : சின்ன ராசா…
ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா
குழு : சின்ன ராசா…