சித்தாடை கட்டிகிட்டு பாடல் வரிகள்
Movie Name | Vannakili |
---|---|
திரைப்பட பெயர் | வண்ணக்கிளி |
Music | K. V. Mahadevan |
Lyricist | A. Maruthakasi |
Singer | P. Susheela and S. C. Krishnan |
Year | 1959 |
பெண் : சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழு : சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
பெண் : அத்தானை பாத்து
அசந்து போய் நின்னாளாம்
குழு : அத்தானை பாத்து
அசந்து போய் நின்னாளாம்
பெண் மற்றும் குழு :
சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
ஆண் : முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
குழு : முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் : வெத்தாக பேசி
இளம் மனச தொட்டானாம்
குழு : வெத்தாக பேசி
இளம் மனச தொட்டானாம்
ஆண் மற்றும் குழு :
ஹான் முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
பெண் : குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
ஆண் : ஆஹா…
பெண் : ஓஹோ …
குழு : குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
பெண் : அந்த கண்டாங்கி சேலைக்காரி கைக்காரியாம்
குழு : அந்த கண்டாங்கி சேலைக்காரி கைக்காரியாம்
பெண் மற்றும் குழு : அந்த கள்ளி அத்தானை கல்யாணம்
பண்ணி கொண்டாளாம்
பெண் மற்றும் குழு :
சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
ஆண் : அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
பெண் : ஆஹா ..
ஆண் : ஆஹா …
குழு : அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
ஆண் : அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம் முன்கோபியாம்
குழு : அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம் முன்கோபியாம்
ஆண் மற்றும் குழு : ஆனாலும் பெண் என்றால்
அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்
ஆண் மற்றும் குழு :
ஹான் முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
பெண் : முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
ஆண் : அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழு : ஆஹா ..
ஆண் குழு : ஆஹா …
பெண் குழு : முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
ஆண் குழு : அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் : அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
ஆண் : இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
பெண் குழு : அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க
ஆண் குழு : கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க
பெண் மற்றும் குழு : சித்தாடை கட்டிகிட்டு
ஆண் மற்றும் குழு : சிங்காரம் பண்ணிகிட்டு
பெண் மற்றும் குழு : மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் மற்றும் குழு : மயிலாக வந்தாளாம்
பெண் மற்றும் குழு : முத்தாத அரும்பெடுத்து
ஆண் மற்றும் குழு : முழ நீள சரம் தொடுத்து
பெண் மற்றும் குழு : வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் மற்றும் குழு : முத்தாரம் போட்டானாம்
பெண் மற்றும் குழு : மயிலாக வந்தாளாம்
ஆண் மற்றும் குழு : முத்தாரம் போட்டானாம்
பெண் மற்றும் குழு : மயிலாக வந்தாளாம்
ஆண் மற்றும் குழு : முத்தாரம் போட்டானாம்
Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள் |
---|