யார் அடித்தாரோ கண்ணம்மா பாடல் வரிகள்
Movie | Maaran | ||
---|---|---|---|
படம் | மாறன் | ||
Music | G. V. Prakash Kumar | ||
Lyricist | Dhanush | ||
Singers | Dhanush | ||
Year | 2022 |
ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்
ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி.
சிட்டு குருவி…
ஆண் : தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே
ஆண் : விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும்
ஆண் : மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்
சிட்டு குருவி…. சிட்டு குருவி
ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்
ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி ….சிட்டு குருவி