எங்கடி நீ போன பாடல் வரிகள்

Movie Dev
படம் தேவ்
Music Harris Jayaraj
Lyrics Kabilan
Singers         S. P. Balasubramaniam
Year 2019

என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே

என்னை விட்டு உன்னை விட்டு
என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

அந்த வானம் பார்த்தது உன்னாலே
நான் பார்த்த வானவில் எங்கே
அடி நேரில் வந்து நீ நின்னாலே
என் எண்ணம் வண்ணமாகும்

பெரு பாவம் என்பது யார் என்றல்
பல காலம் காலமாய் காதல்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்

நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள
உன் காதல் விட்டு என்னை கொள்ள
நீ உன்னை தாண்டி வாடி மெல்ல
எனக்கு என்றும் உன் மேல் கோவம் இல்லை

என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்



என் வத்தி குச்சியின் தல மேலை
நீ காதல் தீயே வைத்தாயே
அதில் வெந்தது போனது நான்தானே
என் காதல் இல்லை கண்ணேய்

என்னை தேதி போல நீ கிழித்தாலும்
தினம் வாழ்த்தும் வாசகம் நானே
என் வாரம் ஏழு நாள் உன்னாலே
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்

என் காதல் பத்தி என்ன சொல்ல
அது காதில் ஒன்னும் கேப்பதில்லை
நான் மண்ணுக்குள்ள போகும் முன்னேய்
என் காதல் நீதான் சொல்லு பெண்ணேய்

என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே

என்னை விட்டு என்னை விட்டு
என்னை விட்டு எங்கடி நீ போன
எங்கடி நீ போன என்னை விட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *