என்னோட ராசி நல்ல ராசி பாடல் வரிகள்
Movie | Mappillai | ||
---|---|---|---|
படம் | மாப்பிள்ளை | ||
Music | Ilaiyaraaja | ||
Lyrics | Gangai Amaran | ||
Singers | Malaysia Vasudevan | ||
Year | 1989 |
குழு : …………………………………
ஆண் : ஹே என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
ஆண் : {ராசி உள்ள பக்கம்
தினம் வெற்றி வந்து சேரும்
காசு உள்ள பக்கம்
வெறும் திமிரு வந்து சேரும்} (2)
ஆண் : நேரம் கூடும் போது
இந்த ஊரும் உன்னை பாடும்
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்
ஆளு அன்பு சேனை
அட அத்தனையும் கூடும்
விட்டுப் போன சொந்தமும் வரும்
ஆண் : கோடியிலே ஒருத்தனுக்கு
ராசி உச்சத்திலே
எந்த குறைகளுமே அவன்கிட்டதான்
தேடி வந்ததில்லே
எது வந்தாலும் போனாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமடா
ஆண் : என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
குழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை
வாசக் கருவேப்பில்லை
ஹேய் ஹேய் ஹேய்
குழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை
வாசக் கருவேப்பில்லை
ஹேய் ஹேய் ஹேய்
குழு : பேய் பிடிச்ச பேர்கள
ஓட்டி விடும் வேப்பில்லை
ஹோய் ஹோய் ஹோய்
பேய் பிடிச்ச பேர்கள
ஓட்டி விடும் வேப்பில்லை
ஹோய் ஹோய் ஹோய்
குழு : அவர் சிரிப்பில
ஹோய்
ஒரு வெறுப்பில்ல
அவர் ஸ்டைலத்தான்
ஹேய்
யாரு ரசிக்கல
ஹேய் ஹொய்யா தன்னா ஹொய்யா தன்னா
ஹொய்யா தன்னா தன்னானா
ஆண் : {ஊரு வம்பு பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய சொல்லி ஏசும்} (2)
ஆண் : ஜில்லா டாங்கு டாங்கு
அட என்ன உங்க போங்கு
ஏண்டியம்மா இந்த ராங்கு
நல்லா இல்ல போக்கு
நான் சொன்னேன் ஒரு வாக்கு
வெத்தலைக்குள் கொட்டப் பாக்கு
ஆண் : ராணியம்மா மனசு வச்சா
நன்மை உண்டாகும்
நல்ல பேச்ச கேக்கலைன்னா
வீடு ரெண்டாகும்
அட அத்தாச்சி பித்தாச்சி
அத்தனை வித்தையும் சொல்லணுமா
ஆண் : என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி