கண்டேனைய்யா மதிமுகம் பாடல் வரிகள்
Movie | Kanniyin Kathali | ||
---|---|---|---|
படம் | கன்னியின் காதலி | ||
Music | S. M. Subbaih Naidu | ||
Lyricist | Kannadasan | ||
Singers | K. V. Janaki | ||
Year | 1949 |
பெண் : கண்டேனைய்யா மதிமுகம் கண்டேனைய்யா
பூரண மதிமுகம் கண்டேனையா
அதில் அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா
அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
பெண் : கண்டேனைய்யா விழிச் சுடரைக் கண்டேனைய்யா
சுட்டும் விழிச் சுடரைக் கண்டேனைய்யா
அதில் கொட்டும் சுடு நெருப்பின்
கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா
கொட்டும் சுடு நெருப்பின்
கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
பெண் : கண்டேனைய்யா இதழிரண்டைக் கண்டேனைய்யா
மது ஊறும் இதழிரண்டைக் கண்டேனைய்யா
அதிலே விஷ மதுவும் கலந்திருக்கக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
பெண் : கண்டேனைய்யா அவளின் அலங்காரமான
நடையைக் கண்டேனைய்யா அன்னம் போல்
அலங்காரமான நடையைக் கண்டேனைய்யா
அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா
அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
பெண் : கேட்டேனைய்யா கொஞ்சும் குரல்தனைக்
கேட்டேனைய்யா
கிளிபோல் கொஞ்சும் குரல்தனைக் கேட்டேனைய்யா
பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா
பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
நான் உண்மையைச் சொன்னேனைய்யா….
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |