கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள் 

Movie Name  Kandukondain Kandukondain
திரைப்பட பெயர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Hariharan and Mahalakshmi Iyer
Year 2000

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆண் : வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

ஆண் : வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி

பெண் : என் கண் பார்த்தது
என் கை சேருமோ
ஆண் : கை சேராமலே
கண்ணீர் சேருமோ

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா

ஆண் : உன் தனிமைக் கதவின்
தாள் நீக்கவா

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

பெண் : மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

ஆண் : கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்

பெண் : உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ

ஆண் : ஏ கனவு மங்கையே
உனது மனது எனது மனதில்
இணையுமோ

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
காதல் முகம் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
ஆண் : விரல் தொடும் தூரத்திலே
ஹே ஹேய்ய்
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

குழு : ……………………………………….

ஆண் : ஆஆஆஆ…
நதியின் தேடல் கடைசியில்
கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில்
உனைக்காண்பது

பெண் : கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்

ஆண் : நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்

பெண் : ஏ காதல் தேவனே
எனது இமையில் உனது விழிகள்
மூடுவேன்

ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண் : விரல் தொடும் தூரத்திலே…
பெண் : விரல் தொடும் தூரத்திலே
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்

பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Kandukondain Kandukondain, Kandukondain Kandukondain Songs Lyrics, Kandukondain Kandukondain Lyrics, Kandukondain Kandukondain Lyrics in Tamil, Kandukondain Kandukondain Tamil Lyrics, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *