கண்ணாரக் காண்பதென்றோ பாடல் வரிகள்

Movie Rajakumari
படம் ராஜகுமாரி
Music S. M. Subbaiah Naidu
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. M. Mariyappa
Year 1947
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
 
ஆண் : மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
 
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
 
ஆண் : கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே…
ஹே…ஹே…ஹே…ஏ…ஏ…ஏ…
கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே…
ஹே…ஏ…..ஹே…..ஏ…ஏ…ஏ…
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே
 
ஆண் : நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
 
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *