கரிசல் தரிசல்நிலவு கொதிக்க பாடல் வரிகள் 

Movie Name  Taj Mahal
திரைப்பட பெயர் தாஜ் மஹால்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer M. G. Sreekumar and K. S. Chithra
Year 1999

ஆண் : கரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
உசுர கடந்து
மனசும் குதிக்க
வரவா ஊரும் அடங்க

பெண் : நாலு தெருவும்
தொறந்து கெடக்க
நாயும் நரியும்
முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க

ஆண் : ஊரு மலை எல்லாம்
கோலி விளையாடி
வருவேன் கோழி ஒறங்க
கண்ணுபடுமிண்டு
காத்துரூவம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க

ஆண் : கரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க

குழு : ஆன் ஹான் ஆன் ஹான்
ஆகான்…

ஆண் : ஏ மச்சக்கண்ணியே
குழு : ஆன் ஹான் ஆன் ஹான்
ஆகான்…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே
பெண் : ன னா ன னா நானா….
ஆண் : ஏ மச்சக்கண்ணியே
ஏ மச்சக்கண்ணியே…..

பெண் : ஆஅ…ஆஹ….ஆ….
ஹா ஹ ஹ ஆஅ..ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ….ஆஅ…

பெண் : என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்

ஆண் : ஊரடங்கிடுச்சு
போர் தொடங்கிடுச்சு
எல்லா நெசம்
இனி நீயே என் வசம்

ஆண் : நான் வரவா கண்ணே
நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து
வாய் தரவா

ஆண் : ஓட்டு கூரையில
என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ..ஓ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்…

ஆண் : நான் வரவா கண்ணே
நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து
வாய் தரவா

ஆண் : ஓட்டு கூரையில
என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்…

ஆண் : ……………………………………

ஆண் : மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு

ஆண் : பழம் நழுவி
பாலில் விழுந்தாச்சு
அது நழுவி
வாயில் விழுந்தாச்சு

பெண் : அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

ஆண் : சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு….
சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு….

பெண் : அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *