குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் பாடல் வரிகள்
Movie Name | Vannakili |
---|---|
திரைப்பட பெயர் | வண்ணக்கிளி |
Music | K. V. Mahadevan |
Lyricist | A. Maruthakasi |
Singer | P. Susheela |
Year | 1959 |
பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே
பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
பெண் : மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே
வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே
மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே
வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே
மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை
மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை
மலர் முகம் கட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே
மலர் முகம் கட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே
பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
பெண் : பெற்றால்தான் பிள்ளை என்பதில்லையே
அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே
பெற்றால்தான் பிள்ளை என்பதில்லையே
அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே
வற்றாத அன்பு என்னும் அமுதையே
வற்றாத அன்பு என்னும் அமுதையே
யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே
யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே
பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள் |
---|