மாறாதா மாறாதா பாடல் வரிகள்

Movie Sangathamizhan
படம் சங்கத்தமிழன்
Music Vivek – Mervin
Lyrics Madhan Karky
Singers         Shankar Mahadevan
Year 2019

ஹேய் ஆயிரம் கோடிகள்
அடித்தவனை
காத்திட வழி இருக்கு
பசியினில் ஏங்கிடும்
ஏழைக்குதான்
சிறையினில் இடம் இருக்கு

விண்கலம் படைத்திட
நிதி இருக்கு
கழிவறை
நமக்கெதற்கு

ஆலைகள் அமைத்திட
நிலம் இருக்கு
வயல் வெளி நமக்கெதற்கு

கீழ் வானம் வானம் விடியாதா
உன்னால் உன்னால் முடியாதா
உண்மை உந்தன் துணை என்றால்
வெற்றி உன்னை அடையாதா எழடா

ஹேய் காலம் மாறாதா
காட்சி மாறாதா
ஒன்றாய் நாம் நின்றால்
ஆட்சி மாறாதா

வாழ்க்கை மாறதா
சோகம் மாறாதா
மாற்றம் நாம் என்றால்
எல்லாம் மாறாதா

பல பல ஆயிரம் கோடிகள் அடித்தவனை
காத்திட வழி இருக்கு
பசியினில் ஏங்கிடும்
ஏழைக்குதான்
சிறையினில் இடம் இருக்கு


விண்கலம் படைத்திட
நிதி இருக்கு
கழிவறை
நமக்கெதற்கு

ஆலைகள் அமைத்திட
நிலம் இருக்கு
வயல் வெளி நமக்கெதற்கு

கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம்
இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம்

சிறு சிறு சிறு விழியிலே
பெரும் பெரும் பெரும் கனவுகள்
அதை தடுத்திடும் தடைகளை
உடைப்போமா உடனே

பல பல பல அரசியல்
அதை எதிர்த்திட புறப்படு
புதிதென ஒரு சரித்திரம்
படைத்திட எழடா உடனே

நான் என்று சொல்லும்போது
ஒட்டாது உதடு
நாம் என்று கத்தி சொல்லி போராடடா
போராளி இனமடா
ஓ ஹோ ஓ நாளை நமதடா

ஹேய் காலம் மாறாதா
காட்சி மாறாதா
ஒன்றாய் நாம் நின்றால்
ஆட்சி மாறாதா

வாழ்க்கை மாறதா
சோகம் மாறாதா
மாற்றம் நாம் என்றால்
எல்லாம் மாறாதா

போராளி இனமடா
நாளை நமதடா


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *