மச்சி உன் முகத்தில் பாடல் வரிகள்
Movie | Raja Mukthi | ||
---|---|---|---|
படம் | ராஜமுக்தி | ||
Music | C. R. Subburaman | ||
Lyricist | Papanasam Sivan | ||
Singers | P. G. Venkatesan, P. Bhanumathi |
||
Year | 1948 |
ஆண் : மச்சி உன் முகத்தில்
மீசையைக் காணோம்
உங்க அய்யா உன்னையே
ஆணாத்தான் பெற்றானா
பெண் : முகத்தைப் பார்த்தே
உயிரையே விடுகிறாயே
உயிரையே விடுகிறாயே அந்த
முட்டாள் பசங்களை நீ ஏய்க்க
வேண்டாமா நம்ம
ஏய்க்க வேண்டாமா
அத்தான் உன் முகத்தில்
மீசையைக் காணோம்
உங்கம்மா உன்னையே
பெண்ணாத்தான் பெற்றாளா
ஆண் : நான் பார்த்ததுமில்லை
உன்னைப்போல சமத்து
உன்னைப்போல சமத்துக் கோழி
கூடையை மூடாப்போனால்
விட்டுப் போவானா
நம்மை விட்டுப் போவானா
ஆண் : மச்சி உன் முகத்தில்
மீசையைக் காணோம்
உங்க அய்யா உன்னையே
ஆணாத்தான் பெற்றானா
பெண் : பட்டை நாமக்கார ஆள் பாவம்
அந்த பட்டை நாமக்
கட்டுசோற்றில் நீ
கையை வைக்கலாமா
கையை வைக்கலாமா
ஆண் : அறுபது சிப்பிக்கு ஆசைப்படாதே
எல்லாந் தெரியுன்டீ
அடியே சொக்கம்மா
பெண் : யார் என்ன செய்யலாம்
ஆசைதான் ஆசைதான்
மோசம் செய்யப்போனால்
பிழைப்பேதத்தான் வயிற்று
பிழைப்பேதத்தான்
இருவர் : அம்மாடி நமக்கு நாமே சமானம்
அறிவில்லா போனால்
அதிர்ஷ்டம் வருமா