மலருக்கு தென்றல் பாடல் வரிகள்
Movie Name | Enga Veettu Pillai |
---|---|
திரைப்பட பெயர் | எங்க வீட்டுப் பிள்ளை |
Music | M.S. Viswanathan |
Lyricist | Aalangudi Somu |
Singer | L. R. Eswari and P. Susheela |
Year | 1965 |
பெண் : வானகமே வையகமே
வளர்ந்து வரும் தாயினமே
ஆணுலக மேடையிலே
ஆசை நடை போடாதே ..
ஆசை நடை போடாதே
பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
பெண் : பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால்
மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
பெண் : படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு
கடலுக்கு நீரே பகையானால்
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது
பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
பெண் : கண்ணுக்குப் பார்வை பகையானால்
அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு
பெண் : பெண்ணுக்குத் துணைவன் பகையானால்
அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது
பெண்கள் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு