முத்தமிழ் கவியே வருக பாடல் வரிகள்
Movie Name  Dharmathin Thalaivan
திரைப்பட பெயர் தர்மத்தின் தலைவன்
Music Ilayaraja
Lyricist Panchu Arunachalam
Singer K. J. Yesudas, K. S. Chithra
Year 1988
பெண் : முத்தமிழ் கவியே
வருக முக்கனி சுவையே
வருக முத்தமிழ் கவியே
வருக முக்கனிச் சுவையே
வருக காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது
 
ஆண் : முத்தமிழ் கலையே
வருக முக்கனிச் சுவையும்
தருக காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..
 
பெண் : காதல் தேவன்
மார்பில் ஆடும் பூமாலை
நான் காவல் கொண்ட
மன்னன் நெஞ்சில் நான்
ஆடுவேன்
 
ஆண் : கண்கள் மீது
ஜாடை நூறு நான்
பார்க்கிறேன் கவிதை
நூறு தானே வந்து
நான் பாடினேன்
 
பெண் : மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
என்னோடு நீ ஆட
ஓடோடி வா
 
ஆண் : காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா
 
பெண் : காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
 
ஆண் : ஆ.. முத்தமிழ்
கலையே வருக
முக்கனிச் சுவையும்
தருக ஓ
 
ஆண் : தங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம்
சிந்து
 
பெண் : நெஞ்சம் எந்தன்
மஞ்சம் அதில் அன்பை
தந்து தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து
 
ஆண் : வார்த்தைக்குள்
அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா
 
பெண் : என்றைக்கும்
விளங்காத பல கோடி
இன்பம் யாருக்கும்
தெரியாமல் நீ சொல்ல
வா
 
ஆண் : காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
 
பெண் : ஆஆ முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக
ஆண் : காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது
 
பெண் : முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக
ஆண் : முத்தமிழ்
கலையே வருக முக்கனி
சுவையும் வருக ஓ
Tags: Dharmathin ThalaivanDharmathin Thalaivan Songs LyricsDharmathin Thalaivan Lyrics, Dharmathin Thalaivan Lyrics in TamilDharmathin Thalaivan Tamil Lyricsதர்மத்தின் தலைவன், தர்மத்தின் தலைவன் பாடல் வரிகள், தர்மத்தின் தலைவன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *