நான் மாந்தோப்பில் பாடல் வரிகள்
Movie Name | Enga Veettu Pillai |
---|---|
திரைப்பட பெயர் | எங்க வீட்டுப் பிள்ளை |
Music | M.S. Viswanathan |
Lyricist | Vaali |
Singer | T.M. Soundararajan and L.R. Eswari |
Year | 1965 |
பெண் : { நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான் } (2)
ஆண் : { நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள் } (2)
ஆண் : { நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னாள் } (2) ஹோய்
ஆண் : நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள்
ஆண் : நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னாள்
பெண் : { ஒன்று கேட்டால்
என்ன கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும்
என்றான் } (2)
ஆண் : { கொஞ்சம்
பார்த்தால் என்ன
பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும்
என்றாள் } (2)
பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்
பெண் : அவன் தாலி
கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்
ஆண் : …………………….
பெண் : அவன் தாலி
கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்
ஆண் : { அவள் வேலி
கட்டும் முன்னாலே
வெள்ளாமை ஏது
என்றே கதை படிச்சா } (2)
பெண் : { அவன் காதலுக்கு
பின்னாலே கல்யாணம்
வருமா என்றே கையடிச்சான் } (2)
ஆண் : அவள் ஆகட்டும்
என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதைக் கடிச்சா
பெண் : ………………………..
பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்
ஆண் : அவன் பூவிருக்கும்
தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்
பெண் : …………………….
ஆண் : அவன் பூவிருக்கும்
தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்
பெண் : { அவள் தேனெடுக்க
வட்டமிடும் மச்சானை
பிடிக்க கண்ணாலே வலை
விரிச்சா } (2)
ஆண் : { அவன் ஜோடி
குயில் பாடுவதை
சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான் } (2)
பெண் : அவள் ஆடியிலே
பெண்ணாகி அஞ்சாறு
மாசத்துல அழகா
தெரிஞ்சுக்கிட்டா
ஆண் & பெண் : …………………..
பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்