நான் தாயுமானவன் தந்தையானவன் பாடல் வரிகள்
Movie Name | Thambathyam Oru Sangeetham |
---|---|
திரைப்பட பெயர் | தாம்பத்தியம் ஒரு சங்கீதம் |
Music | M. S. Viswanathan |
Lyricist | Pulamaipithan |
Singer | P. Jayachandran |
Year | 1982 |
ஆண் : நீலக் கருவிழியில் ஓலை கொடு மை எழுதி
ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி
வாரி தலை சீவி வகிடெடுத்து பின்னலிட்டு
வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ….
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
ஆண் : அடி நானே உனது உயிர்க்காப்பு
கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு
அடி நானே உனது உயிர்க்காப்பு
கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு
நானே இடுவேன் வளைக்காப்பு……
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
ஆண் : புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே
அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ
புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே
அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ
ஆண் : நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
ஆண் : வைரத்தை சுமக்கும் இடையோடு
தங்கமே மெதுவாய் நடை போடு
தங்கமே மெதுவாய் நடை போடு……
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
ஆண் : பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
ஆண் : திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
ஆண் : முத்தங்கள் கனிவாய் தரும்போது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்