நீயும் நானும் பாடல் வரிகள்
Movie | Sindhubaadh | ||
---|---|---|---|
படம் | சிந்துபாத் | ||
Music | Yuvan Shankar Raja | ||
Lyrics | Sa | ||
Singers | Santhosh | ||
Year | 2019 |
ஆண் : நீயும் நானும் பார்த்த வானம்
தேய்கிறதே தேய்கிறதே
மார்பின் மீது வாழும் வாசம்
கேட்கிறதே கேட்கிறதே
ஆண் : எங்கே சென்றாய்
என் மழைதுளி நஞ்சாகுதே
கண்ணீர் எல்லாம்
உன் பிரிவினில் முள்ளாகுதே
ஆண் : காணலையே காணலையே
வாங்கி வந்த வானவில்லை
மீட்டிடுவேன் மீட்டிடுவேன்
வண்ணம் இன்னும் தீரவில்லை
ஆண் : நீயும் நானும் பார்த்த வானம்
தேய்கிறதே தேய்கிறதே
மார்பின் மீது வாழும் வாசம்
கேட்கிறதே கேட்கிறதே
ஆண் : வேண்டாம் என்றே
காலம் கூறும்
போதும் என்றே
பாதம் வேகும்
ஆண் : ஆனாலும் மலைதாண்டி
தீராத கடல்தாண்டி
தீ தாண்டி வருவேனே
பொறு கண்மணி
ஆண் : வாழ்வென்னை வெறுத்தாலும்
வயதேறி நரைத்தாலும்
நீ வாடும் நிலம் தேடி
வருவேனடி
ஆண் : ஊன் உள்ளம் சிதைந்தாலும்
உயிர் என்னை பிரிந்தாலும்
உன்னை காண வருவேனே நானே
என் தேனே வந்தேனே
ஆண் : எங்கே சென்றாய்
என் மழைதுளி நஞ்சாகுதே
கண்ணீர் எல்லாம்
உன் பிரிவினில் முள்ளாகுதே
ஆண் : காணலலையே காணலையே
வாங்கி வந்த வானவில்லை
மீட்டிடுவேன் மீட்டிடுவேன்
வண்ணம் இன்னும் தீரவில்லை
ஆண் : நீயும் நானும் பார்த்த வானம்
தேய்கிறதே தேய்கிறதே
மார்பின் மீது வாழும் வாசம்
கேட்கிறதே கேட்கிறதே