பெண் மனம் ஓர் நிலை நில்லாது பாடல் வரிகள்
Movie | Kanniyin Kathali | ||
---|---|---|---|
படம் | கன்னியின் காதலி | ||
Music | S. M. Subbaih Naidu | ||
Lyricist | Kannadasan | ||
Singers | M. L. Vasanthakumari | ||
Year | 1949 |
பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லா…….ஆ…..து
பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லா……ஆ…..து
பெண் : பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்
பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்
யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்
யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்
பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லா…….ஆ…..து
பெண் : வெண்மதி மண்டலம் மேவி நீ இருந்தாலும்
வீர வைராக்கிய விரதம் நீ புரிந்தாலும்
கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்
கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்
உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்
உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்
பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லா…….ஆ…..து
பெண் : வீணாகப் பிடிவாதம் செய்யாதே சும்மா
வானாளை விருதாவில் கழிக்காதே அம்மா
ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா
ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா
இறுதியில் அவமானம் அடைவாய் நீ தகுமா
பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லா…….ஆ…..து
பெண் மனம் ஓர் நிலை நில்லாது
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |