போர்க்களம் அங்கே பாடல் வரிகள்
Movie Name | Thenali |
---|---|
திரைப்பட பெயர் | தெனாலி |
Music | A. R. Rahman |
Lyricist | Piraisoodan |
Singer | Srinivas and Gopika Poornima |
Year | 2000 |
பெண் : போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
பெண் : காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுது
இங்கே
பெண் : போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
ஆண் & பெண் : ஹம்ம் உன்னை
எங்கு பிரிகிறேன் உனக்குள்
தானே வாழ்கிறேன் அன்பில்
உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலால்
நினைக்கிறேன்
ஆண் : ஹம்ம் உன்னை
எங்கு பிரிகிறேன் உனக்குள்
தானே வாழ்கிறேன் அன்பில்
உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலால்
நினைக்கிறேன்
பெண் : நீயும் சொன்ன
சொல்லை நம்பி இன்னும்
உலகில் இருக்கிறேன்
ஆண் : உனது முகமும்
அசையும் திசையில்
எனது உதயம் பார்கிறேன்
பெண் : உன்னிலே என்னை
நான் தேடி தேடி வருகிறேன்
பெண் : போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
பெண் : காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுது
இங்கே
பெண் : போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
பெண் : பேச மறந்து
சிரிக்கிறேன் பிரிந்தும்
உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
ஆண் : உனக்கு பிடித்த
உலகம் வாங்கி உன்னை
அங்கு வைக்கிறேன் நிமிடம்
நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
பெண் : இறப்பிலோ
பிறப்பிலோ உன்னில்
நானே வாழ்கிறேன்
ஆண் : பொற்காலம் இல்லை
பூவில் காயம் இல்லை
புன்னகை தீவில் உயிரும்
தேவை இல்லை
பெண் : ஆஹா ஆஆ ஆஆ
ஆண் : பொற்காலம் இல்லை
பூவில் காயம் இல்லை
புன்னகை தீவில் உயிரும்
தேவை இல்லை
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
Tags: Thenali, Thenali Songs Lyrics, Thenali Lyrics, Thenali Lyrics in Tamil, Thenali Tamil Lyrics, தெனாலி, தெனாலி பாடல் வரிகள், தெனாலி வரிகள் |
---|