பொறுத்தது போதும் பொங்கிட பாடல் வரிகள்
Movie | Thamezharasan | ||
---|---|---|---|
படம் | தமிழரசன் | ||
Music | Vijay Narain | ||
Lyrics | ARP. Jayaraam | ||
Singers | K. J. Yesudas | ||
Year | 2020 |
ஆண் : பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….
ஆண் : உனக்கென எனக்கென
வழியில்லையா
உலகினில் பொதுவினில்
விதியில்லையா
ஆண் : நீதியும் நேர்மையும்
கலங்கிடுதே
தீமையும் துரோகமும்
வலம் வருதே
தர்மமும் நியாயமும் அழுகிறதே
ஆண் மற்றும் குழு :
போதும் இது போதும்
நாம் பொறுத்தது போதும்
வேண்டும் இங்கு வேண்டும்
நமது உரிமைகள் வேண்டும்
காலம் எதிர்காலம்
நமதாகிட வேண்டும்
ஆண் : பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா…..
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….
குழு : …………………………..
ஆண் : நாடென ஒரு சிலர் உடமைகளா
நதிகளும் அவருக்கு அடிமைகளா
காசுக்கு வாங்கிய ஆட்சிகளா
மக்களின் வாழ்வென்ன வறுமையிலா
ஆண் : குற்றத்துக்கே துணை சட்டமடா
ஏழையிடம் விளையாடுமடா
நடந்துவிட்ட
அந்த தவறுகளை
திருத்திடவே
நம்மால் முடியும்
ஆண் : ஒரு குரலாக முழங்கிட வா
ஒரு இனமாக இணைந்திட வா
பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி
தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்
ஆண் : பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா…..
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….
குழு : ………………………………………
ஆண் : ரத்தத்தை சிந்திடும் ஏழையிடம்
புத்தனின் போதனை எடுபடுமா
விளக்கினில் விழுந்துட்ட விட்டிலை போல்
துடித்திடும் பேருக்கு வழி வருமா
பேசுவதெல்லாம் அமைதி என்றால்
ஆயுதம் செய்வது எதற்கு இங்கே
ஆண் : தடை உடைத்து
தடை காத்திடுவோம்
இடை மறித்தால்
படை பெருக்கிடுவோம்
ஆண் : தீபத்தை நெருப்பென சொல்லாதே
நெருப்பினை தீயென தள்ளாதே
பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி
தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்
ஆண் : பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….
ஆண் : உனக்கென எனக்கென
வழியில்லையா
உலகினில் பொதுவினில்
விதியில்லையா
ஆண் : நீதியும் நேர்மையும்
கலங்கிடுதே
தீமையும் துரோகமும்
வளம் வருதே
தர்மமும் நியாயமும் அழுகிறதே
ஆண் மற்றும் குழு :
போதும் இது போதும்
நாம் பொறுத்தது போதும்
வேண்டும் இங்கு வேண்டும்
நமது உரிமைகள் வேண்டும்
காலம் எதிர்காலம்
நமதாகிட வேண்டும்
ஆண் : பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….