புவி ராஜா பாடல் வரிகள்

Movie Kanniyin Kathali
படம் கன்னியின் காதலி
Music S. M. Subbaih Naidu
Lyricist Kannadasan
Singers         M. L. Vasanthakumari,
Tirchi Loganathan
Year 1949
பெண் : புவி ராஜா……
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
ஏ….புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
 
பெண் : அலைகடல் சேர்வான் போல் மகிழ்வோம்
நாமே பார் மேல் ஈடிலா……
அலைகடல் சேர்வான் போல் மகிழ்வோம்
நாமே பார் மேல் ஈடிலா காதலர்……
 
பெண் : புவி ராஜா……
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
 
ஆண் : விலை ஆகாத பொருள் போல் நானே
புவி மேல் நாடோடி ஏழையம்மா
விலை ஆகாத பொருள் போல் நானே
புவி மேல் நாடோடி ஏழையம்மா
உயர் ராணியின் காதலி
நான் வீணாக நாடினால் கை கூடுமோ….
 
பெண் : புவி ராஜா……
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
 
பெண் : ஏழையும் உயர்வும் தாழ்மையும்
மாசிலாக் காதலுக்குண்டோ
ஏழையும் உயர்வும் தாழ்மையும்
மாசிலாக் காதலுக்குண்டோ
 
ஆண் : இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி
துன்பத்தை நாடுவையோ……
இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி
துன்பத்தை நாடுவையோ……
 
பெண் : மகிழ்வுடன் ஏற்பேனே
மதுவெனச் சுவைப்பேனே
மகிழ்வுடன் ஏற்பேனே
மதுவெனச் சுவைப்பேனே
 
ஆண் : மரணம் நேர்ந்திடிலோ
பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே…….
ஆண் : மரணம் நேர்ந்திடிலோ
பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே…….
 
பெண் : புவி ராஜா……
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: Kanniyin Kathali,  Kanniyin Kathali Songs Lyrics,  Kanniyin Kathali Lyrics,  Kanniyin Kathali Lyrics in Tamil,  Kanniyin Kathali Tamil Lyrics,  கன்னியின் காதலி,  கன்னியின் காதலி பாடல் வரிகள்,  கன்னியின் காதலி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *