சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி பாடல் வரிகள் 

Movie Name  Vannakili
திரைப்பட பெயர் வண்ணக்கிளி
Music K. V. Mahadevan
Lyricist A. Maruthakasi
Singer S. C. Krishnan and A. G. Rathnamala
Year 1959

பெண் : சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
ஒன் தாகம் தீர இஷ்டம் போல ஊத்திக்குடி
ஒன் தாகம் தீர இஷ்டம் போல ஊத்திக்குடி
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி

ஆண் : பாக்குறேன் நல்லா பாக்குறேன்
பெண் : சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி

பெண் : சந்தையிலே கெடைக்கும் பழச்சாறு
இல்லே சாரு
இது இந்த வீட்டு மரத்தில் காச்ச
ரெண்டு பழத்தின் சாறு …..

ஆண் : பாத்திரத்தில் இருப்பதை
நீ பரீட்சை பாக்கலே
கோவை பழத்தைப் போல
உதட்டினாலே இனிப்பைச் சேர்க்கலே
பாத்திரத்தில் இருப்பதை
நீ பரீட்சை பாக்கலே
கோவை பழத்தைப் போல
உதட்டினாலே இனிப்பைச் சேர்க்கலே
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக் கொடு
என் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துக்கொடு
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக் கொடு

பெண் : காத்திருக்கணும் அதுக்கு
ஏத்த காலமும் வரணும்
என் கழுத்தில் முடிச்சி போட்ட பின்னே
அப்படி கேக்கணும்
ஆண் : அம்மாடி ….
பெண் : காத்திருக்கணும் அதுக்கு
ஏத்த காலமும் வரணும்
என் கழுத்தில் முடிச்சி போட்ட பின்னே
அப்படி கேக்கணும்
இப்போ சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
ஒன் தாகம் தீர சக்கர போட்டு ஆத்திக்குடி
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி

ஆண் : ஆத்தி ஆத்தி குடிச்ச போதும்
சூடு ஆறலே
மன சூடு ஆறல
நீ அங்கே போயி நிற்பதாலே
தாகம் தீரல எனக்கு தாகம் தீரல

பெண் : ஐயா
ஆக்கப் பொறுத்த மனுஷன்
நீயும் ஆற பொறுக்கணும்
எங்க அப்பாக்கிட்ட
சம்மதம் கேட்டு விஷயம் முடிக்கணும்

ஆண் : ஹான் ஹான்
சின்ன விஷயம் இதுக்கு
அவுங்க சம்மதம் எதுக்கு
சின்ன விஷயம் இதுக்கு
அவுங்க சம்மதம் எதுக்கு
எனக்கு தேவையான இனிப்பு
உனது வாயிலே இருக்கு

பெண் : சிரிச்சு சிரிச்சு பேசி
என்னை மயக்கும் மச்சானே
சிரிச்சு சிரிச்சு பேசி
என்னை மயக்கும் மச்சானே
நீ விரிச்ச வலையில் கடவுள் என்னை
விழவும் வச்சானே

பெண் : இப்போ சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டேன்
உன் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துப்பிட்டேன்
ஆண் : ஆமா சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டே
என் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துப்பிட்டே.
சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *