சாலையோரம் சோலை ஒன்று பாடல் வரிகள்
Movie Name | Payanangal Mudivathillai |
---|---|
திரைப்பட பெயர் | பயணங்கள் முடிவதில்லை |
Music | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Singer | S. P. Balasubrahmanyam and S. Janaki |
Year | 1982 |
பெண் : சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தான் அசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்
பெண் : நீங்கள் என்னை பார்த்தால்
குளிர் எடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஆண் : ஹேய் பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது
பெண் : சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
ஆண் : கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
பெண் : கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததினால்
கன்னி மனம்தான் துடிக்க
ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
பெண் : சேர்த்து வைத்த தாகம்
கண்ணால் இன்று கீறும்
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா இன்று கீறும்
ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே
நேரமில்லையே இப்போது
ஆண் : சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
பெண் : கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா…