சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பாடல் வரிகள்

Movie Hey Sinamika
படம் ஹாய் சினாமிகா
Music Govind Vasantha
Lyricist Madhan Karky
Singers         Keerthana and Saiprabha
Year 2022

பெண் : பூம்பாவையே அச்சம் ஏனடி
வெட்கம் ஏனடி அதையுதிர்த்து
ஆடவாவென அழைக்கிறேனே
பெண்ணே முன்னே வா வா
 
பெண் : என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்
உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் கூடிட அழைக்கிறேனே
 
பெண் : மாயம் போலே நீயும் ஆடாயோ
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ
வாராயோ மேடே ஏராயோ
 
பெண் : {சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர
இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு} (2)
 
ஆண் : மிர்ஹா தா தா ….
 
பெண் : பால் நிலவானாய் ஓ வானிலே
நிலவாட
ஓ கண்ணில் ஆளாய் மண்மேலே புயலாட
 
பெண் : காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து
நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் வண்டி போல நீ வீழ்ந்தாடடி
காதலிலே கண்கள் மூடி நீ வாழ்ந்தாயோ
இன்பம் தேடி வீழும் வரை
வாழ்வே பிறை வேண்டா சிறை
 
பெண் : {சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர
இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு} (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *