சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா பாடல் வரிகள்
Movie Name | Kandukondain Kandukondain |
---|---|
திரைப்பட பெயர் | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
Music | A. R. Rahman |
Lyricist | Mahakavi Subramanya Bharathiyaar |
Singer | Hariharan |
Year | 2000 |
ஆண் : சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ
ஆண் : பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடீ
ஆண் : சோலை மலரொளியோ
உனது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே
உனது நெஞ்சின் அலைகளடீ
ஆண் : கோலக் குயிலோசை
உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன்
ஆண் : சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி
ஆண் : மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார்
கன்னத்து முத்தமொன்று