நெளியுங் கானலில மொகங்காட்டும் பாடல் வரிகள்

Movie Kuthiraivaal
படம் குதிரைவால்
Music Pradeep Kumar and Maarten Visser
Lyricist Sathish Raja Dharmar
Singers         Lalitha Vijaykumar and Priyanka NK
Year 2022

பெண் : ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ
 
ஆண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
 
பெண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
 
பெண் : நெளியுங் கானலில
மொகங்காட்டும் செங்குருத்தே
வெளியெல்லா எட்டு வைக்க
எட்ட போகும் கானலல்லோ
 
ஆண் : வலியா உருவெடுத்து
வந்த சீவன் இங்க நிக்க
உசிரா வொனப் பாக்க உச்சி
வானம் நோக்கனுமோ
 
பெண் : நெலத்த கூறு வைக்க
நெஞ்சம் குறுகிப் போக
பொழைச்சேன் பொழைச்செனுன்னு
வாழாத இந்த சனமே
ஆண் : வாழாத இந்த சனமே
 
வசனம் : ……………………
 
ஆண் : சொல்ல தலைக்கு வச்சு
சொப்பனம் சேரையில
நில்லாம நீ வா சாமி
வந்திங்க சாய்ஞ் சொறங்கு
வந்திங்க சாய்ஞ் சொறங்கு
நீ வந்திங்க சாய்ஞ் சொறங்கு
 
பெண் : கரடெல்லாம் எட்டு வச்சு
காடெல்லாம் நீயோடி
சிரிச்ச மொக மெடுத்து
செலையா நீ அமைஞ்ச தெனம்
 
ஆண் : எட்டு வச்ச தடமெல்லாம்
நீலாம்ப பூத்து நிக்க
இங்கனையா வானமின்னு
மேகமெல்லாம் வந்திறங்க
மேகமெல்லாம் வந்திறங்க
 
பெண் : ரெக்கைய தொவளவிட்டு
வெறும் வானம் அளக்காம
யெறங்கி இங்கன வா
பூந்தரையில நீ ஒறங்கு
ஆண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு
பெண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு
 
வசனம் : …………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *