தைலாங்குயில் தலையாட்டுதே பாடல் வரிகள்

Movie Yutha Satham
படம் யுத்த சத்தம்
Music D Imman
Lyricist Yugabharathi
Singers         Sid Sriram
Year 2022

ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்

தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்டுதே காத்து
 
ஆண் : இதுவரையில் பார்த்திடாத
வானவில் மலர்க்காட்டை நீட்டுதே
இரவு பகல் நீயும் நானும்
பேசிட கடல் ஓசை நீக்குதே
 
ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி
நமது கதை கேட்டே தூங்காதோ
எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான்
உலகம் நமை பார்த்தே ஏங்காதோ
 
ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்டுதே காத்து
 
ஆண் : ஹா ஆ…ஆஅ…ஆஅ…
 
ஆண் : நீயே எல்லாமென்று
என் காதல் கோலம் தீட்டாதோ
பாவம் அய்யோ என்று
உன் பாசம் ஜாடை காட்டாதோ
 
ஆண் : மணல்வெளிகள் உன் நினைவுகளால்
பொன் துகள்கள் என்றாகும் போது
கனவுகளோ என் கவலைகளோ
நம் உறவைத் துண்டாடிடாது
 
ஆண் : ஒளி வீசும் சூரியன் நீயோ
கதை பேசும் காதலின் தாயோ
மனதை மழையாய் பொழிவாயோ
 
ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்தே காத்து
 
ஆண் : இதுவரையில் பார்த்திடாத
வானவில் மலர்க்காட்டை நீட்டுதே
இரவு பகல் நீயும் நானும்
பேசிட கடல் ஓசை நீக்குதே
 
ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி
நமது கதை கேட்டே தூங்காதோ
எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான்
உலகம் நமை பார்த்தே ஏங்காதோ
 
ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *