தாம்பத்யம் ஒரு சங்கீதம் பாடல் வரிகள்
Movie Name | Thambathyam Oru Sangeetham |
---|---|
திரைப்பட பெயர் | தாம்பத்தியம் ஒரு சங்கீதம் |
Music | M. S. Viswanathan |
Lyricist | Vaali |
Singer | M. S. Viswanathan |
Year | 1982 |
ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்
தாம்பத்யம் ஒரு சங்கீதம்
ஸ்ருதி லயம் நயம் கொண்டாடும் தேவ கீர்த்தனம்
அதுதான் ராக தாள பாவம் கூறும் காதல் மந்திரம்
ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….சங்கீதம்……..
ஆண் : ஜாதகங்கள் வகுத்த வழி
ஜாதிகளின் உறவைக் கொண்டு
மூத்தவர்கள் சம்மதிக்க
மணந்தவர்கள் பலருண்டு
ஆண் : காதலெனும் வீதியிலே
கண் வரித்த உறவைக் கொண்டு
மாலையிட்டு மேடையிலே
மணந்தவர்கள் சிலருமுண்டு
ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….சங்கீதம்……..
ஆண் : ஓமக் குண்டம் நெய் வார்த்து
அக்னியை வலம் வந்து
ஊரறிய கைப் பிடித்த
உறவு கூட பிரிவதுண்டு
ஆண் : சட்டங்களை சாட்சி வைத்து
பத்திரத்தில் பதிவு செய்து
சாகும் வரை பிரியாத
தம்பதிகள் உலகில் உண்டு
ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….சங்கீதம்……..
ஆண் : நாயகனும் நாயகியும்
நெஞ்சு ரெண்டு இணையாமல்
நாளுக்கொரு குற்றம் சொல்லி
ஆளுக்கொரு திசை பார்த்தால்
ஆண் : எந்த வகை திருமணமும்
இடையினில் உடைவதுண்டு
தாளம் கெட்ட பாடலை போல்
கோலம் கெட்டு போவதுண்டு
ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….
சங்கீதம்……..சங்கீதம்……