தென்மதுரை வைகை நதி பாடல் வரிகள்
Movie Name  Dharmathin Thalaivan
திரைப்பட பெயர் தர்மத்தின் தலைவன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S.P. Balasubrahmaniyam,
Malaysia Vasudevan,
P. Susheela
Year 1988

ஆண் : { தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு } (2)
தேய்கின்றது தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்
 
ஆண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி
 
ஆண் : நம்மை போல
நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும்
இல்லை தன்னை போல
என்னை என்னும் நீயும்
நானும் ஓர் தாய் பிள்ளை
 
ஆண் : தம்பி உந்தன்
உள்ளம் தானே அண்ணன்
என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற
நியாயம் இல்லை
 
ஆண் : கண்ணோடு தான்
உன் வண்ணம் நெஞ்சோடு
தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க
 
ஆண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி
 
ஆண் : நெஞ்சில் என்னை
நாளும் வைத்து கொஞ்சும்
வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம்
யாவும் கண்ணில் காணும்
காலம் உண்டு
 
ஆண் : பூவை சூடி
பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே
மானே உள்ளம் தன்னை
கொள்ளை கொண்ட கள்வன்
இங்கு நானே நானே
 
ஆண் : உன்னோடு தான்
என் ஜீவன் ஒன்றாக்கினான்
நம் தேவன் நீ தானம்மா என்
தாரம் மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
 
ஆண் : { தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு } (2)
 
பெண் : { தேய்கின்றது
பொன் மாலை நிலா } (2)
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்
 
குழு : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி

Tags: Dharmathin ThalaivanDharmathin Thalaivan Songs LyricsDharmathin Thalaivan Lyrics, Dharmathin Thalaivan Lyrics in TamilDharmathin Thalaivan Tamil Lyricsதர்மத்தின் தலைவன், தர்மத்தின் தலைவன் பாடல் வரிகள், தர்மத்தின் தலைவன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *