திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது பாடல் வரிகள்
Movie | Rajakumari | ||
---|---|---|---|
படம் | ராஜகுமாரி | ||
Music | S. M. Subbaiah Naidu | ||
Lyricist | Udumalai Narayanakavi | ||
Singers | M. M. Mariyappa and T. V. Rathinam |
||
Year | 1947 |
ஆண் : திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
தாமரையது
திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
அதனால் நானே பெரியவனென்றது
தாமரையது
அதனால் நானே பெரியவனென்றது
பெண் : மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
ஆண் : கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
பெண் : கதையின் முடிவு தானெது
ஆண் : கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
மற்று மொரு கள்வன் வந்து
சேர்ந்ததால்
கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
பெண் : சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
ஆண் : சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
பெண் : சரிதான் பிறகென்ன நடந்தது
ஆண் : சல்லாப எழில் மயிலே அது தெரியாது
பெண் : சொல்லவா நான் சொல்லவா
நடந்ததை நான் சொல்லவா
பொல்லாத கள்ளனை
மனந்திருடிய மூன்றாவது கள்ளனை
ராணி சிறையில் தள்ளி மூடினாள்
மஹாராணி சிறையில் தள்ளி மூடினாள்
ஆண் : சொல்லுவாய் மானே
சிறை உள்ள இடந்தானே
அதை சொல்லுவாய் மானே
பெண் : உள்ள மென்னும் சிறையில் அந்த
உள்ள மென்னும் சிறையில் அந்த
கள்ளனை நான் வைத்த விதம் தான்
சொல்லவா நான் சொல்லவா சுகுமாரா
சொல்லவா இன்னும் சொல்லவா