திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள் 

Movie Name  Taj Mahal
திரைப்பட பெயர் தாஜ் மஹால்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Palakkad Sreeram, Kalpana Raghavendhar,
Year 1999

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா

ஆண் : போர் தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

குழு : ………………..

பெண் : எங்கூரு பொம்பளைய
மோப்பமிட வந்தவனா
எங்கசியான் மூக்கறுத்தாக
ஆண் : எங்காட்ட திருடி தின்னு
சப்பு கொட்டி நின்னவன
எங்காத்தா நாக்கறுத்தாக

பெண் : எங்க குறும்பாட்டு
கறி கொழம்பு
குளிதலையில் மண மணக்கும்
வாசத்துக்கே எச்சி விட்டீக

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச
கொறட்டாத்து தண்ணியில
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க

பெண் : அட கோம்பா மான் தோப்புல
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்
அப்பனுக்கு செலவில்லாம
ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக

பெண் : அட களவாணி கோத்திரமே
காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே
காளமாட்டு மூத்திரமே
எப்ப நீங்க திருந்தப்போறீங்க

குழு : …………………….

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி
தப்பு செஞ்சா தலையிலடி
பரம்பரையா எங்க கொள்கையடா

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட
மத்ததெல்லாம் வாழ மட்ட
மானம் காக்க வீரம் வேணுமடா

ஆண் : அட சோளக்கூழு
கேட்டு வந்தா
சோறு போட்டு விசிறிவிடும்
ஈரமுள்ளது எங்க வம்சமடா

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா
கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரம் தானே எங்க அம்சமடா

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா

ஆண் : எங்க உறைய விட்டு
வாள் எடுத்தா
ரத்த ருசி காட்டி வைக்கும்
வழக்கம் எங்க குல வழக்கமடா

ஆண் : நான் தட்டி வெச்சா
புலி அடங்கும்
எட்டு வெச்சா மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்க
போகுதடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா

ஆண் : போர்தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *